Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அருணகுமார
உலக மலையேறும் தினத்தையொட்டி, விசேட நிகழ்வொன்று, நேற்று (10) பன்வில பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கலாபொக்க மலைப் பிரதேசத்தை மய்யப்படுத்தி நடைபெற்றது.
வாழ்க்கைக்கு மலைகள் எவ்வளவு முக்கியதுவமிக்கது என்பதை உணர்த்தவும் மலைப் பிரதேசங்களைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்வதன் மூலம் வெவ்வேறு பலன்களைப் பெற்றுக்கொள்வதற்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பானது இத்தினத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளது.
இதற்கமைய, கலாபொக்க மலையப்பிரதேசத்தில் முன்னெக்கப்பட்ட இந்த நிகழ்வில், மாத்தளை மாவட்ட சாரண அமைப்பின் அங்கத்தவர்கள் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், கபரகல விபுலானந்தா கல்லூரி மாணவர்களுக்கு சின்னம் அணிவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன், உக்ரேன், இலங்கை பராசூட் வீரர்களால் பராசூட் நிகழ்வும் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மாத்தளை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
28 minute ago
39 minute ago
2 hours ago