2025 மே 09, வெள்ளிக்கிழமை

உலகின் மிகச்சிறிய வாஷிங் மெஷின் ; காணொளி

Mithuna   / 2024 பெப்ரவரி 25 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிகச்சிறிய வாஷிங் மெஷினை உருவாக்கி ஆந்திராவை சேர்ந்த சாய் திருமலாநீதி என்பவர் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், சாய் திருமலாநீதி ஒரு சிறிய வாஷிங் மெஷினை உருவாக்கும் செயல்முறை காட்சிகள் உள்ளது. மிகவும் நுணுக்கமான கவனிப்புடன், சுவிட்ச் மற்றும் ஒரு சிறிய பைப் உள்ளிட்ட சிறிய பாகங்களை பயன்படுத்தி அவர் வாஷிங் மெஷினை ஒருங்கிணைக்கிறார். அது முழுமையாக செயல்பட தொடங்குகிறது.

பின்னர் அதில் தண்ணீர் ஊற்றுகிறார். அதன்பிறகு ஒரு சிறிய துணியை போட்டு சலவை செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. சிறிது நேரத்தில் அந்த துணியை வெளியே எடுத்தபோது அது சுத்தமாக காட்சி அளிக்கிறது. இணையத்தில் வைரலான இந்த வீடியோ 70 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் சாய் திருமலாநீதியை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X