Editorial / 2023 ஓகஸ்ட் 10 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இருவரும் உல்லாசமாக இருந்தது பலாத்காரம் ஆகாது என்று கூறி இளைஞர் மீது பெண் தொடர்ந்த வழக்கை இரத்து செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தாவணகெரேவில் 30 வயது பெண்ணொருவர் வசித்து வருகிறார். அவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு முகநூல்(பேஸ்புக்) மூலம் இளைஞர் ஒருவர் பழக்கமானார். பின்னர் 2 பேரும் நேரில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்துள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு அந்த பெண்ணிடம் இருந்து இளைஞன் விலக தொடங்கி உள்ளார். இதையடுத்து அந்த பெண் பெங்களூரு இந்திராநகர் பொலிஸில் புகார் அளித்தார். அப்போது இளைஞன் 6 ஆண்டுகளாக தன்னை பலாத்காரம் செய்துவிட்டு தற்போது திருமணத்திற்கு மறுப்பதாக புகார் அளித்தார். இந்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.
இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை (08) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டார். பின்னர் அவர், '6 ஆண்டுகளாக மனுதாரர், இளைஞனுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். அப்போது அவர்கள் உல்லாசமாக இருந்துள்ளனர். இதை பலாத்காரம் என்று கூறு முடியாது' என்றார்.
மேலும் இந்த வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
15 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago