2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

உள்நாட்டு மீனவர்கள் 8 பேர் கைது

George   / 2016 ஒக்டோபர் 16 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் 8 பேர் கடற்படையினரால் கைது​செய்யப்பட்டுள்ளனர்.

தடைசெய்யப்பட்ட வலை மற்றும் வெடிபொருட்களை பயன்படுத்தி, மன்னார் கடற்ரைப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களே இவ்வாறு சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

மீனவர்கள் பயன்படுத்திய டிங்கி படகுகள் இரண்டு, தடைசெய்யப்பட்ட வலைகள் இரண்டு, 66 ஜோடி துடுப்புகள், 330 கிலோகிராம் மீன் என்பவற்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்பன மன்னார் உதவி மீன்பிடி அத்தியட்சகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .