2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விரைவில் நடக்கும்

Gavitha   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை அடுத்தவருடம் ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஊகங்கள் வெளியாகியிருந்தாலும், எல்லை மீள்நிர்ணயச் செயற்பாடு நிறைவடைந்தவுடன், விரைவில் தேர்தல் நடத்தப்படும் என ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அசோக பீரிஸ் தலைமையிலான ஐவரடங்கிய குழு, எல்லை மீள்நிர்ணய அறிக்கையைக் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கையளித்ததைத் தொடர்ந்து, இவ்வருடம் ஜூன் மாதத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கமோ அல்லது அமைச்சரவையோ எந்தவித முடிவுகளையும் எடுக்கவில்லை என அவர் கூறினார்.

இந்தப்பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டபின்னர், தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவித்த அவர், உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களில் பிரதிநிதித்துவத்தை 25 சதவீதத்தால் அதிகரிப்பது, இதற்குள் உள்ளடங்குவதாகத் தெரிவித்தார்.

இக்குழுவின் பரிந்துரைகள், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர், இறுதி முடிவுகளை எடுப்பர் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X