Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சோளம்,உளுந்து,கச்சான்,குரக்கன் மற்றும் மிளகாய் என்பவற்றின் இறக்குமதிக்கு அடுத்த வருடம் முதல் அனுமதி வழங்கப்படமாட்டாதென, விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த உணவுப் பொருட்களுக்காக அறவிடப்படும் விசேட வியாபார வரியை அடுத்த வருடம் முதல் அதிகரிப்பதற்கும் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட பயிர்களை நாட்டில் உற்பத்தி செய்வதற்காக, உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியா,பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து, சோளம், உளுந்து, கச்சான், குரக்கன் மற்றும் மிளகாய் என்பன இறக்குமதி செய்யப்படுவதாகவும், இதற்கென பெருமளவு தொகை செலவிடப்படுவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதால் ஏற்படும் பண விரயத்தை கட்டுப்படுத்துவதற்காக, அடுத்த வருடம் உரிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இவ்வாறான பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்கவும் விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
48 minute ago
2 hours ago
2 hours ago