2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்

Freelancer   / 2025 மே 06 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று காலை ஆரம்பமானது.

இன்று (06) காலை 7.00மணி முதல் மாலை 4.00 மணி வரை நாடு முழுவதும் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் ஆரம்பமாகியுள்ளது.

339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக 1 கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த முறை தேர்தலில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிலிருந்து 75,589 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் 8,287 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X