2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் தெரிவு

George   / 2015 செப்டெம்பர் 30 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின், அடுத்த இரண்டு வருடங்களுக்கான உறுப்பினர்கள் தெரிவுக்கான வாக்கெடுப்பு, செவ்வாய்க்கிழமை(29) இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பபை அடுத்து. சங்கத்தின் தலைவராக மீண்டும் லசந்த ருகுனுகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உப தலைவர்களாக காஞ்சன மாரசிங்க, பிரகீத் பெரேரா ஆகியோரும் செயலாளராக துமிந்த சம்பத்தும் உப செயலாளர்களாக ஏ.ஜயசூரியன், பத்மினி மாத்தரகேவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், உப பொருளாளர்களாக சவனி சேஷாதி, பீ.ஜீ.தில்கான் விமல்க ஆகியோரும் தேசிய ஒருங்கிணைப்பாளராக குமார அலகியவன்னவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 23 குழு உறுப்பினர்களும்  தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதன்படி ஏ.டிட்டோ குகன், பிரதீப் குமார், என்.ஜெயகாந்தன், கே.சந்திரமதி, கே. அசோக் குமார், ஆர்.சனத், சிறியான் சுஜித், சிந்துஜா தர்மராஜா, பிராங்க் த சொய்சா, மஹிந்த ரூபசிங்க, ருக்மால் சில்வா, ருக்மால் கமகே, சதுர கீதநாத், பீ.கே.பண்டார, பபுது சபுதந்திரி, லக்ஷ்மன் முதுதந்திரகே, ரங்க பண்டாரநாயக்க, சம்பத் விலேகொட, சாந்த விஜேசூரிய, சசித்திர விக்கிரமநாயக்க, நிமால் அபேசிங்க, கே.எம்.ரம்சி, ஆனந்த மெதகெதர ஆகியோர் குழு உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X