2025 மே 19, திங்கட்கிழமை

உழவு இயந்திரத்தில் கண்ணிவெடி

Freelancer   / 2022 ஒக்டோபர் 28 , பி.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் -மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாப்பாமோட்டை பகுதியில் இருந்து மன்னார் நகரில் உள்ள சாவக்கட்டு மயானப் பகுதிக்கு நேற்றைய தினம் (27) கழிவு மண் ஏற்றி வந்த  உழவு இயந்திர பெட்டிக்குக்குள் மண்ணுடன்  வெடிக்காத நிலையில்  கண்ணிவெடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் வேலை செய்த நபர் ஒருவரால் கண்ணிவெடி உள்ளமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த விடயம் தொடர்பாக உடனடியாக மன்னார் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் பொலிஸார் குறித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
 
மேலும் நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று விசேட அதிரடிப்படையின்  தலைமையில் கண்ணிவெடி செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X