2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஊக்கமருந்து தடை வர்த்தமானிக்கு அமைச்சரவை அங்கிகாரம்

Editorial   / 2018 ஒக்டோபர் 24 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தக் கூடாத ஊக்கமருந்துகள் மற்றும் ஊக்கமருந்து தடை உள்ளடக்கப்பட்ட விசேட வர்த்தமானியொன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

விளையாட்டுகளில் ஈடுபடும் போது, ஊக்கமருந்துகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் 34 ஆவது உறுப்புரைக்கமைய, இலங்கையில் கடந்த சில  நாள்களுக்கு முன்னதாக ஊக்கமருந்து தடைப்பட்டியல் ஒன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

உலகில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து ஒழிப்பு பிரதிநிதிகள் மூலம் வருடாந்தம் வெளியிடப்படும் பட்டியலுக்கு அமைவாக, இலங்கையின் ஊக்கமருந்து தடைப்பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.

எனவே குறித்த ஊக்கமருந்து தடைப்பட்டியலை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்காக, அமைச்சர் பைஸர் முஸ்தபாவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .