Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜனவரி 10 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
'சுடர்ஒளி' பத்திரிகையின் முன்னாள் பிரதம, ஸ்தாபக ஆசிரியர் குமாரவேலு கந்தர் இரத்தினசிங்கம் (கே.கே.ஆர்.) யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் உள்ள அவரது வீட்டில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காலாமானார். இறக்கும் போது அவருக்கு வயது 87ஆகும்.
உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவராவார். தமிழ்ப் பத்திரிகை உலகில் சுமார் 60 ஆண்டுகள் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார்.
இவர், பல மூத்த தமிழ் ஊடகவியலாளர்களை உருவாக்கியுள்ளார். கண்டிப்புக்கும் கடமைக்கும் முக்கியத்துவம் கொடுத்த கே.கே.ஆர். இலங்கைத் தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவர். செய்தி எழுதுவதற்கான புதிய தமிழ் உரை நடை வடிவத்தை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவர்.
காலஞ் சென்ற எஸ்.டி.சிவநாயகத்தின் வலதுகரமாக நான்கு தசாப்தங்களுக்கு மேல் பணியாற்றிய இவர், 'சுதந்திரன்', 'வீரகேசரி' பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகவும், 'தினபதி', 'சிந்தாமணி', 'சூடாமணி' பத்திரிகைகளின் பிரதி ஆசிரியராகவும் 'சுடர்ஒளி' பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் நீண்டகாலம் பணியாற்றியிருந்தார். தமது முகத்தை அம்பலப்படுத்தாத கே.கே.ஆர். ஊடகத்துறைக்கு காத்திரமான பங்களிப்பை ஆற்றியுள்ளார். இவரின் இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் நாளை திங்கட்கிழமை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
20 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
22 minute ago