2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஊடகவியலாளரின் புத்தகத்தை பறித்த விவகாரம்: பிரதம நீதியரசருக்கு கடிதம்

Kanagaraj   / 2016 ஜனவரி 18 , பி.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளைஞன் ஒருவனின் மரணம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நீதவான் விசாரணையின் போது, அங்கு செய்தி சேகரித்துகொண்டிருந்த ஊடகவியலாளரின் குறிப்பு புத்தகத்தை, நீதிமன்ற
பொலிஸாரினால் அபகரித்துசெல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு இலங்கை பத்திரிக்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.

இதுதொடர்பில், பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவனுக்கு, நேற்று திங்கட்கிழமை கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளது.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

செய்தி சேகரிக்க சென்றிருந்த ஊடகவியலாளரின் குறிப்பு புத்தகத்தை அபரிகரித்துச் சென்றமையானது ஊடகச் சுதந்திரம், ஊடகவியலாளருக்கு இருக்கின்ற அரசியலமைப்பு ரீதியான உரிமை மற்றும் பொது மக்களின் கவனத்தை ஈர்த்திருந்த வழக்குத் தொடர்பில் தகவல் தெரிந்து கொள்வதற்கான மக்களின் உரிமை ஆகியவற்றுக்கு நேரடியாக இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பின்றி விசாரணைகளை நடத்துவதற்கு பணிக்குமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறிப்பேட்டுப் புத்தகத்தை அபகரித்தமை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கும் கடிதமொன்றை அச்சங்கம் அனுப்பிவைக்கத்துள்ளது. அக்கடிதத்தின் பிரதி, ஊடகத்துறை அமைச்சருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X