2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் ஞாயிறன்று முக்கிய அறிவித்தல்

Editorial   / 2020 மார்ச் 20 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், சிலாபம், நீர்க்கொழும்பு பொலிஸ் பிரிவின் கொச்சிக்கடை, ஜா-எல மற்றும் வத்தளை பொலிஸ் பிரிவு பகுதிகளில் தளர்த்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீண்டும் நண்பகல் 12 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இன்று (20) மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை (23) காலை 6 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்தநிலையில் அனைத்து விதமான ரயில் சேவைகளும் இன்றுமுதல் இடைநிறுத்தப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (23) காலை 6 மணி முதல் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

அத்துடன், இன்று (20) பிற்பகல் 4 மணி தொடக்கம் அனைத்து அதிவேக வீதிகளும் மூடப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மத வழிபாட்டுக்கான யாத்திரைகள், உல்லாச பயணங்கள் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகள் அனைத்தும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை (23) காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவதுடன், அதனை மீண்டும் அமுல்படுத்துவது குறித்து ஞாயிற்றுக்கிழமை (22) அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .