Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 செப்டெம்பர் 28 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அதிமேதகு Adel Ibrahim,வௌ்ளிக்கிழமை ( 26) அன்று பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ்மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
எகிப்திய தூதரை அன்புடன் வரவேற்ற பாதுகாப்பு செயலாளர் அவருடன் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான வழிகளை விரிவுபடுத்துதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மேலும், இரு நாடுகளின் பாதுகாப்புநிறுவனங்களுக்கிடையில் கல்வி மற்றும் தொழில்முறை பரிமாற்றங்களை அதிகரித்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அறிவுப் பகிர்வு மற்றும் கூட்டுமுயற்சிகளுக்கான வாய்ப்புகளை எடுத்துக்காட்டி, இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை விரிவுப்படுத்துவதில் எகிப்தின் உறுதிப்பாட்டை எகிப்த்திய தூதுவர் எடுத்துரைத்தார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago