2025 ஜூலை 05, சனிக்கிழமை

’எட்டு பேர் வைத்தியசாலையில் அனுமதி’

Editorial   / 2019 ஜனவரி 02 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் – ​நுரைச்சோலை பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக, நேற்று (01) எட்டு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு குழுக்களுக்குமிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில், கத்தியால் தாக்கி கொண்டதில் இருவர் வெட்டுகாயங்களக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த சம்பவத்தின் போது, புத்தளம் வைத்தியசாலை மற்றும் கற்பிட்டி வைத்தியசாலைகளிலிருந்து அம்பூலன்ஸ் வாகனம் சம்பவ இடத்துக்கு கொண்டுவரப்பட்டதோடு, காயமடைந்த எட்டு பேரையும் புத்தளம் வைத்தியசாலையில் கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு குறித்த எட்டு பேரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .