2025 ஜூலை 14, திங்கட்கிழமை

எண்ணெய்க் குழாய் மீது வசித்தோருக்குப் புதிய வீடுகள்

Editorial   / 2018 ஒக்டோபர் 24 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கமல்

கொழும்புத் துறைமுகத்தில் இருந்து கொலன்னாவை பிரதேசத்துக்கு எரிபொருள் அனுப்பப்படும் குழாயை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களுக்கான புதிய வீடுகளை வழங்கும் திட்டம், நேற்று (23) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமையில் இந்த நிகழ்வு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தானத்தில் இடம்பெற்றது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முன்னெடுத்து வரும் எண்ணெய்க் குழாய்களைச் சீரமைக்கும் பணிகளின் ஒரு கட்டமாகவே, இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், மேற்படி பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் குடியிருப்புகளை அகற்ற, நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளது எனவும், இருப்பினும், மக்கள் நலன் கருதி அவர்களுக்குப் புதிய வீடுகளை அமைத்துக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், இத்தனை நாள்களும், எரிபொருள் குழாயின் மேல், இம்மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இந்தக் குழாயின் மீது தீப்பற்றியிருந்தால், முழு கொழும்பு நகரமுமே நாசமாகியிருக்கும். கடந்த ஆட்சிக்காலம் போல் இருந்திருந்தால், மக்களை ஒரே இரவில் வெளியேற்றியிருப்பர்.

"ஆனால், நல்லாட்சி அரசாங்கம் அவ்வாறு செயற்படாது. நாங்கள் அதற்குப் பதிலாக புதிய வீடுகளை வழங்க ஏற்பாடு செய்தோம். அதன் முதற்கட்டப் பணியே இந்த நிகழ்வாகும்" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .