Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜனவரி 20 , பி.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவின் திட்டங்களுக்கு எதிரான அரசியல்வாதிகளை வேட்டையாட, பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், நிதிக்குற்றப் புலனாய்வுப்பிரிவை பயிற்றுவிப்பதாக, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நேற்று புதன்கிழமை(20) குற்றஞ்சாட்டினார்.
பத்தரமுல்லை, 'அப்போகம'வில், 'தாய்நாட்டின் பயணத்தின் முடிவு' எனும் கருப்பொருளில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஓர் அப்பாவி மனிதனைக் குற்றவாளி ஆக்குவது எப்படியென்பது தொடர்பில், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் பயிற்சிகளை வழங்குவதாக அவர் கூறினார்.
'இவர்களின் பிரதான நோக்கம், தமது நிகழ்ச்சிநிரலுக்கு எதிரான அரசியல்வாதிகளைக் கட்டிப்போடுவதே' என அவர் கூறினார்.
இலங்கையின் ஆட்சிமாற்றத்துக்குத் தாம் காரணமாக இருந்ததாகவும் இதனால், தமது கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும் எனவும் ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, நோர்வே, இந்தியா ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன என அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் ஷெய்ட் ராட் அல் ஹுசைன், அடுத்தமாதம் இலங்கை வரவுள்ளார்.
இவரைத் திருப்திப்படுத்த, இவர் வரமுன்னரே ஒரு விசேட யுத்தக்குற்ற நீதிமன்றத்தை உருவாக்க, நாடாளுமன்றில் ஒரு சட்டமூலத்தைக் கொண்டுவருவதற்கான ஆயத்தங்களை அரசாங்கம் செய்துள்ளது என அவர் கூறினார். தமிழ்ப் பிரிவினைவாதத்துக்கு வழிசெய்யும் வகையில், இராணுவம் மற்றும் மத்திய அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த அரசாங்கம், சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் மோதவிட்டு, இந்தக் குழப்பத்தினுள் தமிழீழத்தை பின்கதவால் வழங்கவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .