2025 ஜூலை 05, சனிக்கிழமை

எதிர்ப்பால் மாத்தறையிலிருந்து கொழும்பு திரும்பினார் அமைச்சர் அர்ஜுன

Editorial   / 2019 ஜனவரி 06 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறையிலிருந்து பெலியத்த வரை அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையில் இன்று முதன் முதலாக   சென்ற ரயிலில் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்த போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பெலியத்த ரயில் நிலையத்துக்கு சென்ற அமைச்சரிடம் இது மஹிந்த  ராஜபக்‌ஷவால் அமைக்கப்பட்ட ரயில் பாதை எனத் தெரிவித்து மஹிந்தவின் ஆதரவாளர்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஊடகங்களுக்கும் எவ்வித கருத்தையும் தெரிவிக்காமல் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அங்கிருந்து சென்றுள்ளார்.

அத்துடன் குறித்த கண்காணிப்பு ரயிலில் மஹிந்தவின் ஆதரவாளர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகள், பதாதைகளையும் தொங்க விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .