2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

“எனக்கு VIP கதிரை வேண்டாம்”

Editorial   / 2024 டிசெம்பர் 02 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகின்றார்கள் என்பதற்காக, இதற்குப் பிறகு எந்தக் கூட்டத்துக்கும் தேவையில்லாத செலவு செய்யாதீர்கள். எனது அனைத்து நிகழ்வுகளின் செலவைக் குறைப்பது குறித்து நிறுவனங்களுக்குத் தெரிவிக்க தயாராகி வருகிறேன். VIP (விசேட பிரமுகர்கள்)  அமர்வதற்காக கதிரைகளை எமக்கு கொண்டு வர வேண்டாம். நாங்கள் சாதாரண பிளாஸ்டிக் கதிரைகளில் அமர்ந்தவர்கள். அந்த கதிரைகள் போதும்  என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்  சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

புத்தளம் மாவட்ட இலக்கிய விழாவிற்காக ஆனமடுவ சுதம்பாய மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இந்த அரச இலக்கிய விழா வடமேல் மாகாண ஆளுநர்  திஸ்ஸ வர்ணசூரிய தலைமையில் புத்தளம் மாவட்ட செயலாளர்  எச்.எம்.எஸ்.பி.ஹேரத் உட்பட புத்தளம் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

மேலும் கருத்துரைத்த பொதுநிர்வாக அமைச்சர், இந்த ஆனமடுவை எமக்கு அறிமுகமில்லாத பிரதேசம் அல்ல.எனவே அந்தச் சூழலினால் எவ்வளவோ உயரிய பதவிகளுக்குச் சென்றாலும் மரங்களும் பசுமையான ஏரிகளும் கொண்ட அழகிய இடம் இது , நாம் இருந்த கடந்த காலத்தை மறக்க முடியாது. எனவே, எந்த நிகழ்ச்சிக்கும் தேவையில்லாத செலவு செய்து பணத்தை வீணாக்க விரும்பவில்லை.

இந்த இலக்கிய நிகழ்வில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த ரெக்ஸ் ஹரிசன், விலாமசேன நம்முனி, பத்ம குமாரி, பெர்னாண்டோ புள்ளே ஆகிய நான்கு ஊடகவியலாளர்கள் உட்பட பல்வேறு துறைகளில் திறமைகளை வெளிப்படுத்திய 11 பேருக்கு காலதினி விருது வழங்கி வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .