Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 03 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்போதும் நடத்துவதைப் போன்று, இந்த முறைத் தேர்தலை நடத்தமுடியாது என்றும் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்றும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் சிலர், நேற்று (02) தெரிவித்தனர்.
இந்நிலையில் இவ்வாறான நிலையில், தேர்தலொன்றை நடத்துவதில் அர்த்தமில்லை என, ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுனமன்ற உறுப்பினரும் கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான ஹிருணிகா பிரேமசந்திர, கொவிட்- 19 நெருக்கடி இருக்கின்றமையால், வாக்களிப்பதற்கான மக்கள் வரிசைக்குச் செல்லமாட்டார்கள் என்று கூறினார்.
வாக்களிப்பதற்காக, மக்கள் வரிசையில் காத்திருப்பார்களா என்று கேள்வியெழுப்பிய அவர், வழமைபோன்று, வீட்டுக்கு வீடு பிரசாரம் செய்வதும் சாத்தியமற்றது என்றும் கூறினார்.
வீட்டுக்கு வீடு சென்று பிரசாரம் செய்தாலும், மக்கள் வேட்பாளர்களை அடையாளம் காணமாட்டார்கள் என்றும் ஆட்சியில் இருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் இது ஒரு பொது பிரச்சினையாகவே இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, சுமார் 1.5 மில்லியன் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள், தங்களது வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை இழந்துவிடுவர் என்றும் எனவே, இவ்வாறான நிலையில் தேர்தலை நடத்தவேண்டிய தேவை இல்லை என்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்கவும் தெரிவித்தார்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago