Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 26 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில், எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக, இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
கொழும்பில், இன்று (26), இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வரவு செலவு திட்டத்துக்கு எதிராக எத்தனை தடவை வாக்களித்துள்ளது என, அமைச்சர் பழனி திகாம்பரம் நேற்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், வரவு செலவு திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதாக நான் என்றுமே கூறவில்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 வேதனம் கொடுத்தால் அரசாங்கத்துக்கு ஆதரவாக வரவு செலவு திட்டத்துக்கு வாக்களிப்பதாவே கூறுகிறேன் என்றார்.
நேற்று அமைச்சர் திகாம்பரம் மற்றும் இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறியிருந்தனர், சம்பபள உயர்வு கிடைக்காவிட்டால் அரசாங்கத்துக்கு வழங்கும் ஆதரவை மறு பரிசீலனை செய்வதாக. இவ்வாறு அவர்கள் கருத்து தெரிவித்ததே பராட்டுக்குரிய விடயமாகும் என குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான், இவர்களும் மலையக மக்களின் உணர்வுகளோடு இருக்கின்றனர் என்றார்.
என்னை பொருத்தவரை, கடந்த காலத்தில் சம்பள உயர்வு கேட்டு ஒன்றரை வருடங்களாக முதலாளிமார் சம்மேளனத்துடன், பேச்சுவார்த்தை நடத்தினோம். இதற்கு காலக்கெடு வைக்காவிட்டால் தொடர்ந்தும் இழுபறி நிலையிலேயே காணப்படும் என்பதால் நான் ஒரு முடிவுக்கு வந்துள்ளேன். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் என்ற வகையில், எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் சம்பள பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால், மறைந்த எமது தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் நினைவு தின நிகழ்வு அனுஷ்டிக்ப்படவுள்ள, எதிர்வரும் 30 ஆம் திகதியன்று எனது நாடாளுன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக உறுதியளிக்கிறேன் என்றார்.
மக்களோடு மக்களாக நின்று சம்பள பிரச்சினைக்கு இறுதி தீர்வு எட்டப்படும் வரை முன்னின்று செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 1,000 சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்காக எத்தகைய போராட்டத்துக்கும் தான் தயார் எனவும் குறிப்பிட்ட அவர், நாடகம் ஆடுவதாக சிலர் என்னை விமர்சிக்கலாம் ஆனால் நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்துவிட்டு எவரேனும் நாடகமாடுவாரார்களா எனவும் கேள்வியெழுப்பினார்.
எதிர்வரும் 30 திகதிக்குள் தீர்வு இல்லையேல், தீபாவளிக்கு பின்னர் மக்களோடு களத்தில் குதிக்கவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
4 hours ago