2024 மே 04, சனிக்கிழமை

எம்.பி பதவியை நீதியமைச்சர் இழக்க நேரிடும்

Simrith   / 2024 ஏப்ரல் 22 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக பதவியேற்ற நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியலமைப்பின் பிரகாரம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என SLPP பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி இன்று தெரிவித்தார்.

இது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் கலந்துரையாடவில்லை எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் விரைவில் முடிவெடுப்பார் எனவும் அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கட்சியின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களின்படி, ஒருவர் மற்றுமொரு அரசியல் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றவுடன் அவரது கட்சி உறுப்புரிமையை விரைவில் இழக்க நேரிடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.

இதனால், அமைச்சர் ராஜபக்ஷ கட்சி உறுப்புரிமையை இழக்க நேரிடும் என்றும், அதன் மூலம் அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்க நேரிடும் என்றும் அவர் கூறினார்.

“அமைச்சர் ராஜபக்ஷ SLPP அங்கத்துவத்தைப் பெற்று, SLPP சீட்டின் கீழ் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். அவர் மற்றுமொரு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்ற குற்றத்தை அவர் செய்துள்ளார். அதனால், அவரது SLPP உறுப்புரிமை இரத்துச் செய்யப்படும், அதன் விளைவாக, அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்" என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .