2024 மே 04, சனிக்கிழமை

எம்.பிக்கள் பணம் பெற்றதால் எதிர்க்கட்சிக்குள் குழப்பம்

Simrith   / 2024 ஏப்ரல் 22 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB), எம்.பி.க்கள் பலர் கட்சித் தலைமையின் அனுமதியின்றி அரசாங்கத்தின் பரவலாக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து தலா 50 மில்லியன் ரூபாய் பெற்றுக்கொண்டதாக வெளிவரும் தகவல்களால் சிக்கலில் சிக்கியுள்ளதாக எமது சகோதர ஊடகமான டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த காலங்களில் எதிர்க்கட்சியில் உள்ள எம்.பி.க்களுக்கு அவர்களின் தொகுதிகளில் விருப்பமான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்து வந்தது. எவ்வாறாயினும், கடந்த ஐந்து வருடங்களாக இவ்வாறான ஒதுக்கீடுகள் இடம்பெறவில்லை, மாறாக, அதே நோக்கத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் அக்காலப்பகுதியில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் ஊடாக வழங்கப்பட்டுள்ளன.

தற்போதைய அரசாங்கம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதுடன் மற்றும் சில SJB பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதுப்பிக்கப்பட்ட அளவுகோலின் படி ஒதுக்கீடுகளைப் பெற்றுள்ளனர்.

கயந்த கருணாதிலக்க, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, அஜித் மன்னப்பெரும, கவிந்த ஜயவர்தன மற்றும் ஜே.சி. அலவத்துவல போன்றோர் இவ்வாறு ஒதுக்கீடுகளைப் பெற்ற SJB பாராளுமன்ற உறுப்பினர்களில் அடங்குவர்.

ஆனால், இந்த எம்.பி.க்கள் அரசிடம் இருந்து நிதி பெறுவதற்கு கட்சித் தலைமையிடம் ஒப்புதல் பெறவில்லை.

இது தொடர்பில் கருத்து கேட்கப்பட்ட போது, ​​SJB பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, இந்த எம்பிக்கள் எவரும் அதற்கான கட்சியின் அங்கீகாரத்தைப் பெறவில்லை என்றார்.

அடுத்த பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த விவகாரத்தை எழுப்புவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இதைப் பெற தகுதியுடையவர்கள் என்றும், எனவே மக்களை மையப்படுத்திய பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு கோரி விண்ணப்பித்ததாகவும் ரூ. 50 மில்லியன் பெற்றுக் கொண்ட எம்.பி.  ஒருவர் கூறினார்.

“அத்தகைய வேலையைச் செய்வதில் தவறில்லை. பரவலாக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் இருந்து பயனடைய நாங்கள் உரிமை பெற்றுள்ளோம். கட்சி மேலிடத்தை தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை,'' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .