2025 ஜூன் 12, வியாழக்கிழமை

எரிசக்தி அமைச்சரின் அதிரடி தீர்மானம்

Freelancer   / 2022 ஏப்ரல் 30 , பி.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இதுவரையில் எரிபொருள் போக்குவரத்துக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளாத அல்லது பெற்றுக் கொள்ள முடியாமல் போன புதிய விநியோகத்தர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தீர்மானித்துள்ளார்.

பணிக்கு வராத உரிமதாரர்களின் உரிமத்தை ரத்து செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதியளவு ஒட்டோ டீசல், சுப்பர் டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் சந்தைக்கு தொடர்ந்தும் விநியோகிக்கப்படும் எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை பெற்றோலிய தாங்கிவூர்திகளின் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13