2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் 8 பதிவு

Freelancer   / 2022 ஜனவரி 04 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த இரண்டு நாட்களில் எரிவாயு வெடிப்பு மற்றும் கசிவுகள் தொடர்பான எட்டு சம்பவங்கள், பொலிஸாருக்கு  இன்று (04) கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஹக்மன கொஹுலியத்த, மொனராகலை பட்டியலந்த மற்றும் வவுனியா வைரவபுளியங்குளம் ஆகிய பகுதிகளில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹக்மன, கொஹுலியத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (04) அதிகாலை 5.30 மணியளவில் எரிவாயு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்த போது தீப்பிடித்து எரிந்துள்ளதுடன், எரிவாயு சிலிண்டரை பரிசோதித்த போது கசிவு ஏற்பட்டுள்ளது.

மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டியாலந்த பிரதேசத்திலும் வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியிலும் நேற்று (03) வீடுகளில் எரிவாயு அடுப்புகள் வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .