2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

எறும்புகளை கண்டு பயம்; இளம்பெண்ணுக்கு சோகம்

Editorial   / 2025 நவம்பர் 07 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலுங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில் வசித்து வந்த 25 வயது பெண்ணுக்கு 2022-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவருக்கு 3 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், அவர்   தன்னுயிரை மாய்த்துக்​ கொண்டார். இதற்கு எறும்புகளே காரணம் என கூறப்படுகிறது. எறும்புகள் மீதுள்ள பயம் மிர்மிகோபோபியா என கூறப்படுகிறது.

இதுபற்றி பொலிஸ் கூறும்போது, சம்பவ பகுதியில் கிடைத்த தற்கொலை குறிப்பில், மன்னித்து விடுங்கள் ஸ்ரீ. இந்த எறும்புகளோடு என்னால் வாழ முடியாது. மகளை நன்றாக கவனித்து கொள்ளுங்கள் என தெரிவித்து உள்ளார்.

அவர் சம்பவத்தன்று, மகளை உறவினர் வீட்டில் விட்டிருக்கிறார். வீட்டை சுத்தம் செய்து விட்டு மகளை திரும்ப அழைத்து கொள்கிறேன் என கூறி சென்றார். காலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய கணவர், பூட்டியிருந்த வீட்டு கதவை அண்டை வீட்டுக்காரர்களின் உதவியுடன் உடைத்து உள்ளே சென்று பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளார்.

அவருடைய மனைவி உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். தொடர்ந்து பொலிஸ் கூறும்போது, அந்த பெண் தூய்மை செய்யும்போது எறும்புகளை பார்த்து இருப்பார். அந்த பயத்தில் தன்னுயரை மாய்த்து இருக்கலாம் என பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X