Freelancer / 2026 ஜனவரி 20 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி, அல்வாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த அன்னலிங்கம் அஜந்தன் (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்குக் கடந்த சனிக்கிழமை காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை அவர் இரத்த வாந்தி எடுத்துள்ளார். பின்னர் காலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவர் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
அவர் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். (a)
17 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
33 minute ago
1 hours ago