2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

எழிலன் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

Gavitha   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட பலர் தொடர்பான வழக்கு, மே மாதம் 19ஆம் திகதிக்கு, முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட யுத்ததின் போது சரணடைந்தவர்கள் தொடர்பான விவரங்கள், இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவு முகாமில் இருப்பதாகவும் இதனை நேற்றையதினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும், முல்லைத்தீவு நீதிமன்றம் கடந்த விசாரணையின் போது உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று (19) செவ்வாய்க்கிழமை, முல்லைத்தீவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

இதனையடுத்து வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X