2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஏமனில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.8.60 கோடி குருதிப் பணம்

Editorial   / 2025 ஜூலை 13 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

செ​விலியர் நிமிஷா பிரி​யா​வின் உயிரைக் காப்​பாற்​று​வதற்​காக ரூ.8.60 கோடி குரு​திப் பணம் தரு​வதற்கு குடும்​பத்​தார் முன்​வந்​துள்​ளனர்.

கேரள மாநிலம் பாலக்​காட்​டைச் சேர்ந்​தவர், செவிலியர் நிமிஷா பிரி​யா. 38 வயதாகும் நிமிஷா பிரியா மேற்​காசிய நாடான ஏமனில் செவிலிய​ராக பணிபுரிந்து வந்​தார். அங்கு தன்​னுடன் பங்​கு​தா​ர​ராக இருந்த ஏமன் நாட்​டைச் சேர்ந்த தலால் அப்டோ மெஹ்தி என்​பவரை விஷ ஊசி போட்டு கொலை செய்த குற்​றச்​சாட்​டில் அவர் கைது செய்​யப்​பட்​டார்.

இந்த வழக்​கில் அவருக்கு அந்​நாட்டு நீதி​மன்​றம் மரண தண்​டனை விதித்​துள்​ளது. அவருக்கு வரும் 16-ம் திகதி தூக்கு தண்​டனை நிறைவேற்​றப்பட உள்​ள​தாக அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. இந்​நிலை​யில், மரண தண்​டனையை தடுத்து நிறுத்​தக் கோரி, உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில் நிமிஷா பிரி​யா​வின் உயிரைக் காப்​பாற்​று​வதற்​காக பாலக்​காட்​டில் உள்ள அவரது குடும்​பத்​தார் தொடர்ந்து போராடி வரு​கின்​றனர்.

 

இந்​நிலை​யில் தலால் அப்டோ மெஹ்தி குடும்​பத்​தா​ருக்கு ரூ.8.60 கோடி குரு​திப் பணத்​தைக் கொடுக்க நிமிஷா பிரி​யா​வின் குடும்​பத்​தார் முன்​வந்​துள்​ளனர். இந்​தப் பணத்தை மெஹ்தி குடும்​பத்​தார் ஏற்​றுக்​கொண்​டால், நிமிஷா பிரி​யா​வின் தண்​டனை ரத்து செய்​யப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

 

 ஷரியா என்று அழைக்​கப்​படும் இஸ்​லாமிய சட்​டத்​தில் தியா அல்​லது குரு​திப் பணம் என்​பது ஒரு வகை​யான நீதி​யாகக் கருதப்​படு​கிறது.கொலை, காயப்​படுத்​துதல், சொத்​துகளைச் சேதப்​படுத்​துதல் போன்ற பல்​வேறு வகை​யான குற்​றங்​களுக்கு இது பொருந்​தும். இந்த குரு​திப் பணத்தை வழங்​கு​வதன் மூலம் தண்​டனையைக் குறைக்​கலாம் அல்​லது முழு மன்​னிப்​பும் பெறலாம். இந்த வகையி​லான சட்ட முறை தற்​போது மத்​திய கிழக்​குப் பகுதி மற்​றும் ஆப்​பிரிக்​கா​வில் சுமார் 20 நாடு​களில் பயன்​பாட்​டில் உள்​ளது.

குரு​திப் பணம் என்​பது முஸ்​லிம்​களின் புனித நூலான குர்​ஆனிலும் அங்​கீகரிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் கொலை வழக்​கு​களுக்​கு, 100 ஒட்​டகங்​கள் போன்ற இழப்​பீடு​களை வழங்​கலாம் என்று இஸ்​லாமியர்​களின் இறைத்தூதர் முகமது நபி​யால் விளக்​கப்​பட்​டுள்​ளது என்று முஸ்​லிம் அறிஞர்​கள் தெரிவிக்​கின்​றனர்.

ஆனால், தற்​போது இந்த இழப்​பீடு தியா எனப்​படும் பணமாகப் பெரும்​பாலும் வழங்​கப்​படு​கிறது. எவ்​வளவு இழப்​பீடு வழங்​கப்​படும் என்​பது கொலை வழக்கு மற்​றும் அந்​நாட்​டின் சட்​டங்​களைப் பொறுத்​தது என்று தெரிய​வந்​துள்​ளது.

இதனுடன் குரு​திப் பணமாகப் பெறப்​படும் தொகையை யாருக்கு வழங்​கு​வது என்​பதும் முடிவு செய்​யப்​படு​கிறது. ஒன்​றுக்கு மேற்​பட்ட நபர்​கள் பணம் பெறு​வதற்கு உரிமை​யுடைய​வர்​கள் என்​றால், அவர்​களிடையே அதை விநி​யோகிப்​ப​தற்​கும் விதி​கள் உள்ளன என்று முஸ்​லிம் அறிஞர்​கள் தெரிவிக்​கின்​றனர்.

பேச்​சு​வார்த்தை: இதுகுறித்து நிமிஷா பிரி​யா​வைக் காப்​பாற்​று​வதற்​காக அமைக்​கப்​பட்ட கவுன்​சிலைச் சேர்ந்த பாபு ஜான் என்​பவர் கூறும்​போது, “கொலை செய்​யப்​பட்ட மெஹ்தி குடும்​பத்​தா​ருக்கு குரு​திப் பணம் வழங்​கு​வதற்​காக பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்டு வரு​கிறது. இதற்​காக நிமிஷா​வின் குடும்​பத்​தைச் சேர்ந்த சாமுவேல் ஜெரோம் ஏமனில் உள்​ளார்.

நிமிஷா​வின் சார்​பில் தற்​போது ரூ.8.60 கோடியை மெஹ்தி குடும்​பத்​தா​ருக்கு குரு​திப் பணம் தரப்​படும் என அறி​வித்​துள்​ளோம். இதற்கு மெஹ்​தி​யின் குடும்​பத்​தார் எந்​த​வித பதிலை​யும் இது​வரை வழங்​க​வில்​லை. அந்த குடும்​பத்​தார் பணத்தை ஏற்க ஒப்​புக்​கொண்​டால், உடனடி​யாக பணத்​தைத்​ திரட்​டி அளித்​துவிடுவோம்​’’ என்​றார்​.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .