2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஏற்றுமதிகளை அதிகரிக்க உடன் திட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 28 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ரூபாயின் மதிப்புக் குறைவடைந்து வரும் நிலையில், இது தொடர்பான நெருக்கடியைச் சமாளிப்பதற்காக, ஏற்றுமதிகளை அதிகரிப்பதற்கான உடனடி நிகழ்ச்சித் திட்டமொன்றை முன்னெடுக்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளது என, பிரதமர் அலுவலகத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள், நேற்று (27) தெரிவித்தன. 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் அடிப்படையில், இந்த நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுப்பதற்கான திட்டங்களை, பொருளாதார நிபுணர்கள் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளனர் என, தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியாவின் ரூபாயும் அண்மைக்காலத்தில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பெரிதளவுக்கு வெற்றியை வழங்காத நிலையில், புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென, பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இதைத் தொடர்ந்து, நாணயப் மதிப்புக் குறைதல் நெருக்கடியை எதிர்கொள்வதற்கு, குறுதிய, மத்திய, நீண்டகால நடவடிக்கைகளை மேற்கொள்ள, அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X