2025 மே 19, திங்கட்கிழமை

ஐ.ஜி.பிக்கு நீதிமன்றம் அறிவுரை

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜராகி காரணங்களை விளக்குமாறு பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) அல்லது பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தால் அதற்கு மதிப்பளிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளது.

வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சந்தர்ப்பத்திலேயே மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் விஜித் மலல்கொட மேற்கண்டவாறு கட்டளையிட்டார்.

பொலிஸ் அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுத்தமைக்கு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நான்கு தடவைகளுக்கு மேல் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தின் அந்த நோட்டீஸ்க்கு மதிப்பளித்து, பொலிஸ் மா அதிபரோ அல்லது அவரது பிரதிநிதியோ நிதியோ, நீதிமன்றத்தின் பிரசன்னமாய் இருக்காமையால் மனு மீதான விசாரணை நான்கு தடவைகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது என்றும் நீதியரசர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X