Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Editorial / 2020 மார்ச் 08 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிரச்சினைகள் காணப்படுவதை பலரும் அறிந்துள்ளனர். கட்சி ஆதரவாளர்களில் 95 சதவீதமானோர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்குச் செல்லுமாறு கூறுகின்றனர். அவர் ஓய்வு பெறவேண்டிய காலம் வந்துவிட்டது. 25 வருட காலம் கட்சித் தலைவராக இருந்து அவர் முதுமையடைந்துள்ளார். எனத் தெரிவித்த பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா, சஜித் பிரேமதாஸவுக்கு கட்சித் தலைமையை வழங்குமாறு கட்சி ஆதரவாளர்கள் கூறுகின்றனர் என்றார்.
திவுலபிட்டிய- மருதகஹமுல்ல பிரதேசத்தில், மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், இன்னும் ஐந்து வருடங்களின் பின்னர் தான் அரசியலில் இருக்கமாட்டேன் என்றார்.
ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைமை பதவியை பற்றிப்பிடித்தவாறு உள்ளார். எனவே, இத்தகையப் பிரச்சினைகளின் மத்தியில், ஐ.தே.க இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவைச் சுற்றி பத்து பதினைந்து பேர் உள்ளனர். அவர்கள் ஐ.தே.கவை வியாபார நோக்கில் பார்க்கின்றனர். இதன் காரணமாகவே மாற்றீடாக, ஐக்கிய மக்கள் சக்தியை ஆரம்பித்துள்ளோம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
55 minute ago
2 hours ago