2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஐ.தே.க ,த.தே.கூ,ஜே.வி.பி இணைந்து இடைக்கால அரசாங்கம்?

Kamal   / 2018 ஒக்டோபர் 30 , மு.ப. 11:30 - 1     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி என்பன இணைந்து இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்க உத்தேசித்து வருவதாக ஐ.தே.க வின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டதன் இலக்குகளை அடைந்துகொள்ளும் நோக்கிலேயே இந்த முயற்சி மேற்கொள்ளபடுவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பியுடன் இது குறித்த தீர்மானிக்க பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதெனவும் அத்தரப்புகள் தெரிவித்தன.

எவ்வாறாயினும், ஜே.வி.பி யினர் மைத்திரி - மஹிந்த அணிக்கும், ரணில் அணிக்கும் தமது ஆதரவை ஒருபோதும் வழங்கப்போவதில்லை என பகிரங்கமாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.   


You May Also Like

  Comments - 1

  • Suresh Tuesday, 30 October 2018 06:32 AM

    Athu sare warathu karanam jvp penade perachanay only unp but ledar sageth

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .