Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 27 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
றொசேரியன் லெம்பேட்
ஒரு காலத்தில் இலங்கை, ஐக்கிய நாடுகள் என்று சொன்னாலே பயந்து கொண்டிருந்த காலம் காணப்பட்டிருந்தது எனத் தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், அந்நிலை இன்று மாறி, அங்கே சென்று துணிச்சலாகக் கருத்துகளைக் கூறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதக் என்றும் தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கம், படிப்படியாக மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமையே அதற்குக் காரணமென, அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசியப் பாடசாலையில், கல்வி அமைச்சின் "அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப பீடத்தின் கட்டடம், வகுப்பறைக் கட்டடம், பெண் ஆசிரியர்களுக்கான விடுதிக் கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழா, நேற்று (26) இடம்பெற்றபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில், படிப்படியாக மனித உரிமைகளையும் ஐக்கிய நாட்டின் சாசனத்தையும் நடைமுறைப்படுத்துவதில் வெற்றி கண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், நல்லாட்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக இதைக் கருத முடியும் என்று குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றுகின்ற பொழுது, இலங்கையின் நிலைப்பாட்டைத் தெளிவாக தெரிவித்திருக்கின்றார் என்று குறிப்பிட்ட அவர், "எங்களுடைய உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, எங்களுக்குச் சந்தர்ப்பத்தை தாருங்கள்" என்பதை, ஜனாதிபதி உறுதியாக தெரிவித்திருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும், சர்வதிகாரப் போக்குடன் நடந்துகொள்வதற்குத் தயாராக இல்லை என்று குறிப்பிட்ட அவர், சர்வதேசத்தின் ஆதரவு இன்றி இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனவும், அவர்களுடன் இணைந்து பயனித்தால் மாத்திரமே, இந்த நாட்டை வளமானதொரு நாடாக மாற்ற முடியும் என்றும் குறிப்பிட்டார்
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago