2025 மே 17, சனிக்கிழமை

ஐ.ம.சு.கூ தேசியப் பட்டியல் விவகாரம்: ஆதாரங்களை வழங்க திகதி குறிப்பு

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எஸ்.செல்வநாயகம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு ஆதாரங்களை வழங்குவதற்காக உயர்நீதிமன்றத்தினால் திகதி குறிக்கப்பட்டுள்ளது.

ஐ.ம.சு.கூ.வின் தேசிய பட்டியலுக்கு எதிராக மக்கள் ஐக்கிய முன்னணியினால் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று கடந்த 26ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவுக்கு மேலும் ஆதாரங்களை செப்டெம்பர் 10 ஆம் திகதி வழங்கமுடியும் என்று உயர் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசர்  கே. ஸ்ரீபவன்இ நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன மற்றும் அனில் குணரத்ன ஆகியோர் கொண்ட குழுவினால் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இந்த மனு தொடர்பாக தமக்கு எந்த ஆவனமும் இதுவரை கிடைக்கவில்லையென பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள்இ  நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்வந்தனர். இதனையடுத்தே நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .