2025 டிசெம்பர் 11, வியாழக்கிழமை

ஐஎஸ்ஐஎஸ் கடிதம் பரிமாற்றம்: பொலிஸாரின் விசேட அறிவிப்பு

Niroshini   / 2021 செப்டெம்பர் 26 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இருந்து இயக்கப்படும் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய வடஸ்அப் குழு போலியானது என பொலிஸ் ஊடக பேச்சாளர் எஸ்எஸ்பி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

‘இன்டர் ஸ்கூல்’ என்ற அந்த வட்ஸ்அப் குழு ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்புடையது என்றும், யாராவது இணைந்த பின்னர், அவர்கள் குழுவிலிருந்து வெளியேற முடியாது என்றும்,மேற்கு மாகாண புலனாய்வு பிரிவினால்  கடிதம் வெளியிடப்பட்டது. அந்தக் கடிதம் ஐஎஸ்ஐஎஸ் அனுப்பியதாகவும் பொலிஸார்தெரிவித்தனர்.

இது தொடர்பில் சர்வதேச புலனாய்வு அமைப்புடன் இணைந்து நடத்திய விசாரணையில் இந்த குழு போலியானது என தெரியவந்துள்ளது.

இந்தக் கடிதம் உண்மையான நகல் என்றும் ஆனால், அதில் குறிப்பிடப்பட்டுள்ள வாட்ஸ்அப் குழு தற்போது செயலற்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X