Freelancer / 2021 செப்டெம்பர் 12 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அங்கொடை தொற்று நோய்களுக்கான நிறுவகத்தில் (ஐடிஎச் வைத்தியசாலை) அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் 180 ஆக குறைந்துள்ளது என்று அந்நிறுவக்த்தின் பணிப்பாளர் டொக்டர் ஹசித அத்தநாயக்க தெரிவித்தார்.
சில வாரங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளின் எண்ணிக்கை 230 ஆக இருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும், ஒட்சிசன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் 30 முதல் 40 ஆக குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒட்சிசன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை முன்னர் 70 ஆக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வைத்தியசாலையின் அனைத்து விடுதிகளுக்கும் போதுமான ஒட்சிசன் வசதிகளை வழங்குவதற்கான முறையான திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago