Freelancer / 2021 ஓகஸ்ட் 25 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து மாத கர்ப்பிணிப் பெண்ணின் ஐந்து மாத சிசுவும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக கம்பளை வைத்தியசாலையின் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
கம்பளையைச் சேர்ந்த அந்தப் பெண், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதன்போது, அந்த கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்துள்ளதாகவும் சத்திர சிகிச்சை மூலம் சிசு அகற்றப்பட்டதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
மரணமடைந்த சிசுவின் தகனம் தகனம் இன்று மாலை கம்பளை மயானத்தில் நடைபெற்றது.
2 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago