Editorial / 2021 மார்ச் 01 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, ஐந்துலாம்பு சந்தியில் கைவிடப்பட்ட கறுப்பு பொதிக்குள் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சுமார் 15 நிமிடங்களுக்கு முன்னர், ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், அப்பிரதேசத்தை பாதுகாப்பு வலயமாக்கி, விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் ஓரளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது,
அந்த கறுப்பு பொதி, பயணப் பொதியென்றும் பிரிதொரு இடத்திலிருந்து கொண்டுவரப்பட்டே, அப்பொதி அவ்விடத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது போடப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
119 என்ற அவசர இலக்கத்துக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மீட்கப்பட்ட அந்த பயணப் பொதியிலிருந்து பெண்ணொருவரின் சடலமே இருந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
27 minute ago
36 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
36 minute ago
2 hours ago
2 hours ago