Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2025 ஜனவரி 30 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் அவருக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் எனக் கருதி ஐந்து பேருக்கு எதிராக தடை உத்தரவு கோரி யாழ். நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் வியாழக்கிழமை (30) நிராகரித்துள்ளது.
யாழ்ப்பாணம் பொலிஸாரால் இந்த வழக்கு புதன்கிழமை (29) தாக்கல் செய்யப்பட்டது.
ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு இடையூறு இல்லாமல், அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் கவனயீர்ப்பை முன்னெடுப்பதற்கான உரிமை சகலருக்கும் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, யாழ்ப்பாணத்தில் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை (31) யாழ்ப்பாணம் வருகிறார்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான போராட்டத்தை தடுக்கும் வகையில் ஐந்து பேருக்கு தடை கட்டளை கோரி பொலிஸார் நீதிமன்றில் விண்ணப்பித்திருந்தனர்.
இது தொடர்பில் தங்கள் தரப்பு நிலைப்பாட்டை நேரடியாகவோ, சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (30) முன்வைக்குமாறு பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் கட்டளை இட்டிருந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ச.சசிகரன், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் பிரபாகரன், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் முருகையா கோமகன் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக தடை கட்டளை கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதனை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ச.சசிகரன் மற்றும் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் பிரபாகரன் சார்பில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆஜராகி தனது வாதங்களை முன்வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
3 hours ago