2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஐவருடன் கடலுக்குச் சென்ற படகு மாயம்

Editorial   / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

5 மீனவர்களுடன் நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற படகொன்று காணாமல் போயுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 30 ஆம் திகதி கடற்றொழிலுக்கு சென்ற ‘கவீஷா துவ’ எனப்படும் மீன்பிடி படகொன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த மீனவர்களுடனான தொடர்பு கடந்த 9 ஆம் திகதி முதல் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு முன்தினம் படகில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .