Freelancer / 2025 நவம்பர் 04 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆறு பேரை கைது செய்து , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதன் போது குறித்த ஆறு பேரில் ஒருவர் யாழ்ப்பாண நகர் பகுதியில் இடம்பெற்ற வழிப்பறி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்பதனை கண்டறிந்த பொலிஸார் குறித்த நபரிடம் அது தொடர்பில் முன்னெடுத்த மேலதிக விசாரணைகளின் போது கொள்ளையடிக்கப்பட்ட சங்கிலி , மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள் என்பவற்றை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள 6 பேரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தொடர் விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். (a)

37 minute ago
39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
39 minute ago
1 hours ago