Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2021 ஜூன் 03 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
உதவி பொலிஸ் அதிகாரியொருவர் (ஏ.எஸ்.பி) தன்னுடைய மனைவியை கடத்திச் சென்றுவிட்டாரென பொலிஸ் நிலையை பொறுப்பதிகாரி (ஓ.ஐ.சி) முறைப்பாடொன்றை செய்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பதிகாரியே, கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் இவ்வாறு முறைப்பாடொன்றை செய்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும்உதவி பொலிஸ் அதிகாரி, குற்றப்புலனாய்வு விசாரணை திணைக்களத்தில் இணைக்கப்பட்ட கடமையில் இருந்துள்ளார்.
“உதவி பொலிஸ் அதிகாரி, உத்தியோகபூர்வ வாகனத்தில் தனது மனைவியை ஏற்றிக்கொண்டு, கொழும்பு-கண்டி வீதியில் பயணித்துகொண்டிருந்தார். அதனை கவனித்த நான், அந்த வாகனத்தை துரத்திச் சென்றேன். எனினும், அவ்வாகனம் உள்வீதிக்குள் நுழைந்து வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்குள் சென்றுவிட்டது.
எனினும், அங்குச் சென்ற நான், விசாரித்தேன். இதன்போது இருதரப்பினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டன. அதன்பின்னர், அங்கிருந்து நான் திரும்பிவிட்டேன்” என்றும் ஓ.ஐ.சி. செய்திருக்கும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த முறைப்பாடு தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago