2024 மே 04, சனிக்கிழமை

’ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்’

Freelancer   / 2024 ஏப்ரல் 25 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களில் ஒன்றான உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம், புதன்கிழமை (24) திறந்துவைக்கப்பட்டது. 

ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி (Dr. Ebrahim Raisi)  மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  ஆகியோரின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. 

இந்த விழாவுக்கு ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு  வருகைதந்திருந்த ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி, மத்தள விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அவரை, பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான குழுவினர் வரவேற்றனர். 

அதன்பின்னர், உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்ட திறப்பு விழாவில் கலந்துகொண்டார். அவர், தனது விஜயத்தை முடித்துக்கொண்டு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக புறப்பட்டுச் சென்றார். 

இந்த திறப்பு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 

 உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி  மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்குப் பின்னர் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களில் இத்திட்டம் ஒன்றாகும்.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் வெற்றிக்காக ஈரான் வழங்கிய தொழில்நுட்ப ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரானின் உதவியின்றி இலங்கையினால் உமா  ஓயாவில் இருந்து கிரிந்தி ஓயாவிற்கு நீரை கொண்டு செல்ல முடியாது என்றார்.

  உலகளாவிய  தெற்கு நாடுகள் தமது அடையாளத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட விரும்புவதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அதற்காக உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .