2024 மே 18, சனிக்கிழமை

ஒப்பந்தங்களை விரைவுபடுத்த நடவடிக்கை

Freelancer   / 2024 மே 03 , பி.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடனை மறுசீரமைப்பதற்கும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கும் இலங்கையின் தற்போதைய முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என சீனா மீண்டும் உறுதியளித்துள்ளது.

இலங்கைக்கான சீன தூதுவர் சி சென்ஹொங் பிரதமர் தினேஷ் குணவர்தன இடையில் நேற்று முன்தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பிரதமரின் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கும் என பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .