Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜனவரி 07 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்று ஆசனங்களை இரண்டு ஆசனங்களாக மாற்றியமைப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள், செவ்வாய்க்கிழமையன்று (05) குறைகேள் அதிகாரி முன்னிலையில் ஒப்புக்கொண்டதாக, நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்தது.
ஆசனங்களின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு குறைகேள் அதிகாரிக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்தே, இது குறித்து கலந்துரையாடப்பட்டதாக இச்சபையின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் இலங்கை போக்குவத்துச் சபை அதிகாரிகள், மோட்டார் வாகன ஆணையாளர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தேசிய போக்குவரத்துச் சபை பிரதிநிதிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், தேசிய போக்குவரத்துச் சபை பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
பஸ்களிலுள்ள ஆசனங்களின் இடைவெளி மற்றும் அகலம் என்பன தொடர்பாக கவனம் செலுத்தப்படவுள்ளதாக மோட்டார் வாகன ஆணையாளர் திணைக்கள அதிகாரியொருவர் இதன்போது தெரிவித்தார்.
தனியார் பஸ்களுக்கும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான கட்டளையை வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .