Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 செப்டெம்பர் 29 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை,கரூர் சம்பவம் திட்டமிட்ட சதி என்பதால் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று தவெக வழக்கு தொடுத்துள்ள நிலையில், தவெக கட்சியின் அங்கீகாரத்தையே ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை தந்து வருகிறது.
மேற்கண்ட மனுக்களின் மீதான விசாரணை இன்றைய தினமே நடைபெறுவது மிகப்பெரிய பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் தமிழக மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது.
கரூரில் நேற்று முன்தினம் நடிகர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், கரூர் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதில் சுகுணா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.. இதனால் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41 ஆக உயிரிழந்துள்ளது.
சிபிஐ விசாரணை கேட்கும் தவெக இந்த சம்பவம் திட்டமிட்ட சதி என தமிழக வெற்றிக்கழகத்தினர் குற்றம்சாட்டிய நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த வக்கீல் அணியினர் இதுதொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவை கொண்டு உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டின் விடுமுறை கால நீதிபதி தண்டபாணியிடம் முறையிட்டனர்.
இதை கேட்ட நீதிபதி, "இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யுங்கள். வழக்கு நாளை (அதாவது இன்று) மதியம் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்" என்றார். நீதிபதியின் இந்த அறிவுறுத்தலை தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் இன்று காலை மனு தாக்கல் செய்யப்படுகிறது.
இன்று மதியம் விசாரணைமதுரை ஐகோர்ட்டுக்கு தற்போது தசரா விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால், நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று மதியம் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இதனிடையே, கரூர் கூட்டத்தின்போது நிபந்தனைகளை பின்பற்றவில்லை என்றும் இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணமாக தவெக கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தவெக கட்சி அங்கீகாரம் கரூர் சம்பவம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் இதுதொடர்பாக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதாவது, மதுரை மானகிரியை சேர்ந்த வக்கீல் செல்வகுமார், இமெயில் மூலமாக தன்னுடைய மனுவை மதுரை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்திருக்கிறார்.
அதில், "தவெக கூட்டத்தில் சுமார் 10000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டபோதிலும், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் நெரிசலான இடத்தில் கூடியிருந்தனர்.
அலட்சியம், தவறான நிர்வாகம், சட்டப்பூர்வ அனுமதிகளை மீறியதன் விளைவாக, அந்த கூட்டத்தில் பங்கேற்ற சிறார்களும், பெண்கள் உள்பட 40 அப்பாவி மக்கள் தங்கள் உயிர்களை இழந்தனர். மேலும் பலர் சிகிச்சையில் உள்ளனர்.
மதுரை ஹைகோர்ட்டில் மனு கரூர் கூட்டத்தில் சிறார், பெண்கள் பங்கேற்பதை தடுக்க அதிகாரிகள் தவறிவிட்டனர். இதன் விளைவாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிடுவது அவசியமாகிறது. எனவே ஏராளமான உயிரிழப்புகளுக்கு காரணமான தமிழக வெற்றிக்கழக கட்சியின் அங்கீகாகாரத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுபோலவே, சிவகங்கை மாவட்டம் ஆளவந்தான்பட்டியை சேர்ந்த வக்கீல் முருகேசன் என்பவரும், தவெகவுக்கு எதிரான மனுவை மதுரை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.
கரூர் துயர சம்பவத்துக்கு காரணமான நடிகர் விஜய் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல் முருகேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒரே நாளில் 2 வழக்கு
இதுபோலவே கரூர் சம்பவத்துக்கு காரணமான தவெகவுக்கு எதிராக, இன்று காலையில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது.. இம்மனுக்கள் மீதான விசாரணை இன்று பிற்பகலில் நடக்கும் என தெரிகிறது.
கரூர் சம்பவம் திட்டமிட்ட சதி என்பதால் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று தவெக வழக்கு தொடுத்துள்ள நிலையில், தவெக கட்சியின் அங்கீகாரத்தையே ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை தந்து வருகிறது.. மேற்கண்ட மனுக்களின் மீதான விசாரணை இன்றைய தினமே நடைபெறுவது அதைவிட பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் தமிழக மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .