2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

’’ஒரு பாம்பை காயப்படுத்தி, அதைக் கொல்லாவிட்டால், அது திருப்பித் தாக்கும்’’

Editorial   / 2025 ஓகஸ்ட் 24 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

"ஒரு பாம்பை காயப்படுத்தி, அதைக் கொல்லாவிட்டால், அது திருப்பித் தாக்கும்" என்று முன்னணி சோசலிசக் கட்சி (FLSP), தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

முன்னணி சோசலிசக் கட்சியின் முன்வரிசை உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவிக்கையில்,  அரசாங்கம் இராஜதந்திர சமூகத்தின் சில பிரிவுகளின் அழுத்தத்தை மீறி ரணில் விக்கிரமசிங்கவுக்கு  எதிராக நடவடிக்கை எடுக்க முன்வந்ததாகக் கூறினார்.

இதற்காக அரசாங்கத்தைப் பாராட்டிய அவர், ரணில் விக்கிரமசிங்கவுக்கு  எதிராக அரசாங்கம் எடுக்கும் மேலதிக நடவடிக்கைகளை   தமது கட்சி  ஆதரிக்கும் என்றார்.

"ரணில் விக்கிரமசிங்க ஓர் ஆபத்தான நபர். படலந்த சித்திரவதைக் கூடத்தை நடத்தியமை குற்றச்சாட்டுகளால் கறைபட்டவர்" என்று நாகமுவ கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X