2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஒருபோதும் அனுமதிக்க முடியாது

Freelancer   / 2023 மார்ச் 22 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றம், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு, ஊடகங்களை பாராளுமன்றத்தின் சிறப்புரிமையை பயன்படுத்தி ஒடுக்க முயற்சிக்கப்படுவதாகவும், இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை   பெற்றோலிய வளங்கள் சட்ட ஒழுங்குவிதிகள் கட்டளை தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
 
பாராளுமன்றத்தின் சிறப்புரிமையை பயன்படுத்தி நீதிமன்றம், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு, ஊடகங்களை ஒடுக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 21 ஆம் திருத்தத்தில் நாங்கள் ஏதேனும் வெற்றியை பெற்றுள்ளோம். அதனூடாக பெற்ற வெற்றியின் ஊடாக நீதிமன்றம் உள்ளிட்ட உயர்நிறுவனங்களின் சுயாதீனத்துவம் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இப்போது பாராளுமன்றத்தின் சிறப்புரிமையை பயன்படுத்தி அதனை இல்லாது செய்ய முயற்சிக்கின்றனர்.

  உயர்நீதிமன்றத்தின் நீதியரசர்களை, அவர்கள் வழங்கிய தீர்ப்பொன்று தொடர்பில் சிறப்புரிமை குழுவுக்கு அழைக்க முயற்சிக்கப்படுகின்றது. எப்படி தீர்ப்பின் மூலம் எம்பிக்களின் சிறப்புரிமை பாதிக்கப்படும் என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X