2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஒலிம்பிக்ஸ் கிராமத்தில் முதல் கொரோனா தொற்று

Freelancer   / 2021 ஜூலை 17 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடங்க ஆறு நாட்களே உள்ள நிலையில் முதல் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அங்குள்ள 'ஒலிம்பிக் கிராமத்தில்' முதல் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இங்குதான் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்களும், விளையாட்டு அணிகளின் நிர்வாகிகளும் தங்கியுள்ளனர். 

பாதிக்கப்பட்ட நபர் ஒரு விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று ஏற்பாட்டுக் குழுவின் செய்தித் தொடர்பாளர் மசா டகாயா தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020இல் நடக்க இருந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

டோக்கியோவில் கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் வழக்குகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன. 

ஜூலை 15 அன்று டோக்கியோவில் 1,308 கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சில நாட்களுக்கு முன்பு, ஜப்பானிய தலைநகரில் டோக்கியோவில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதால் அவசரநிலை விதிக்கப்பட்டது. 

ஆறு வார கால அவசரநிலை ஆகஸ்ட் 22 வரை நடைமுறையில் இருக்கும். 
டோக்கியோவில் தொற்றுநோய் ஏற்பட்டதில் இருந்து நான்காவது முறையாக, அவசரநிலை விதிக்கப்பட்டுள்ளது. 

ஒலிம்பிக் கிராமம் ஜூலை 13 அன்று திறக்கப்பட்டது. இந்த விளையாட்டு சமூகத்தில் உள்ள வீரர்களுக்கு ஒவ்வொரு நாளும் கொரோனா பரிசோதனை நாளாக  இருக்கும். 

கொரோனா வைரஸின் இரண்டு விசாரணை அறிக்கைகளுடன் வீரர்கள் ஜப்பானை அடைய வேண்டும், மேலும் வருகையின் போது மற்றொரு சோதனை இருக்கும். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .